மாறிய மனிதனும், மாரியும்
July 29, 2013
மனிதன் என்பவன்
மனிதம் மறந்து
மரங்களை அழிக்க,
மாதம் மும்மாரி,
மும்மாரி வருடமென
மாரியும் மாறிட
மண்ணும் மாறியே
மாடிகளாய் ஆகிட,
மலைகளில் பெய்த
மழை வெள்ளத்தால்,
மண்ணெல்லாம் அரிக்கப்பட
மாடிகள் இடிபட,
மனிதன் இங்கே
மிதக்கிறான் பிணமாய்
மரங்களை அழித்ததால்!